உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொதுத்தேர்வுக்கு தயார் நிலை!

பொதுத்தேர்வுக்கு தயார் நிலை!

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் முழுமையடையும் நிலையில் உள்ளது.மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. மாவட்டத்தில், 25 ஆயிரத்து, 688 பேர் தேர்வெழுத உள்ளனர். தேர்வுக்கென, மேல்நிலைப்பள்ளிகளில், 92 மையங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர் உட்பட தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கான பணி ஒதுக்கீடுகள் நிறைவு பெற்றுள்ளது.கண்காணிப்பு பணியில் ஈடுபடும் பறக்கும் படையினர், இணை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தலைமையிலான குழுவில் யார், யார், வழித்தட அலுவலர், கட்டுக்காப்பாளர் உள்ளிட்டோருக்கான பணி என்ன என்பது இறுதி செய்யப்பட்டுள்ளது.வினாத்தாள்களை தேர்வறைக்கு எத்தனை மணிக்கு கொண்டு செல்ல வேண்டும்; எந்த நேரம் வினாத்தாள் கட்டுகளை பிரிக்க வேண்டும்; அதற்கு முன் விடைத்தாள்களை வழங்கி, தேர்வர்களிடம் கையொப்பம் பெறுவது உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகள் குறித்து தேர்வு பணி அலுவலர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.நாளை (26ம் தேதி) பொதுத்தேர்வு பணிக்கான சிறப்பு அதிகாரி ஆனந்தி மற்றும் முதன்மை கல்வி அலுவலர் இணைந்து, பிளஸ் 2 தேர்வு பணிக்கான இறுதி கட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளனர். மார்ச் 4ம் தேதி பிளஸ் 1 தேர்வு துவங்க உள்ளது. அத்தேர்வு பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி