உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காய்கறி வரத்து குறைவால் விலை கிடுகிடு 

காய்கறி வரத்து குறைவால் விலை கிடுகிடு 

திருப்பூர்;காய்கறி வரத்து குறைவால், பொங்கல் முடிந்த பின்பும், காய்கறி விலை உயர்ந்துள்ளது. மார்க்கெட் வரத்து இயல்புக்கு திரும்பும் வரை இந்நிலை தொடரும் என்கின்றனர், வியாபாரிகள்.வியாபாரிகளின், மொத்த கொள்முதல் நிலையங்களில் இருந்து வழக்கமான வரத்து துவங்காத நிலையில், வரத்தும் குறைந்துள்ளதால், காய்கறி விலை உயர்ந்துள்ளது.நேற்று பச்சை மிளகாய், 70 ரூபாய், அவரை, 80, பீன்ஸ், 80 கேரட், 60, கத்தரி, 110, வெண்டை, 70, உருளை, 35, பெரிய வெங்காயம், 30, சின்ன வெங்காயம், 40, புடலங்காய், 60, பீர்க்கன்காய், 70, முள்ளங்கி, 50, பாகற்காய், 70, மேரக்காய், 25, பீட்ரூட், 50, வாழைக்காய் ஒன்று ஏழு ரூபாய், காலி பிளவர், 20 முதல், 45 ரூபாய், முட்டைகோஸ், 25 ரூபாய்க்கு விற்றது. தக்காளி விலை குறைந்து, 23 ரூபாய். மல்லி தழை, கட்டு, 30 ரூபாய், கருவேப்பிலை, கிலோ, 50 ரூபாய், புதினா கட்டு, பத்து ரூபாய்.வியாபாரிகள் சிலர் கூறுகையில், 'பொங்கல் விடுமுறையில் சென்றவர்கள் திரும்பாததால், மொத்த வரத்து குறைந்துள்ளது. முகூர்த்த தினத்தை முன்னிட்டு விற்பனை அதிகரித்துள்ளதால், முள்ளங்கி, அவரை, பாகற்காய் உட்பட அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. மே மாதத்துக்கு பின், தற்போது தான், பச்சை மிளகாய் கிலோ, 70 ரூபாய்க்கு விற்கிறது. வரத்து இயல்பு திரும்பும் வரை விலை குறையாது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !