உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தனியார் வேலை வாய்ப்பு முகாம் 40 பேருக்கு வேலை

தனியார் வேலை வாய்ப்பு முகாம் 40 பேருக்கு வேலை

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் துவக்கிவைத்தார். திருப்பூரை சேர்ந்த ஆடை உற்பத்தி, நகைகடை உள்பட, 23 நிறுவனத்தினர் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும், 49 ஆண்கள்; 70 பெண்கள் என, மொத்தம் 119வேலை தேடுவோர் பங்கேற்றனர். இவர்களில், மாற்றுத்திறனாளிகள் 5 பேர் உள்பட 16 ஆண்கள்; 24 பெண்கள் என, மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர்; அவர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி