உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெட்டப்பட்ட பனை மரங்கள் வழக்குப்பதிவு; அபராதம் விதிப்பு

வெட்டப்பட்ட பனை மரங்கள் வழக்குப்பதிவு; அபராதம் விதிப்பு

அவிநாசி:பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தெற்குப் பகுதியில் நட்சத்திர நந்தவனம் அமைந்துள்ளது. இதில் இருந்த இரண்டு பனை மரங்களை, இரு நாட்களுக்கு முன் சிலர் வெட்டி சாய்த்தனர். கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், அவிநாசி போலீசாரிடம் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராஜவேல், தாசில்தார் மோகனன், ஆர்.ஐ., மகேஸ்வரி ஆகியோர் கோவில் நந்தவனத்தில் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக நந்தவனத்தை ஒட்டி வாகன சர்வீஸ் ஸ்டேஷன் வைத்துள்ள நந்தகுமார் என்பவர் மீது வழக்கு பதிவுசெய்தனர். வருவாய்த் துறையினர் தரப்பில் பனை மரங்களை வெட்டிய குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ