உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருமண அமைப்பாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருமண அமைப்பாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்;தென்னிந்திய திருமண அமைப்பாளர் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க மாவட்ட தலைவர் அக்பர்பாஷா தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சிவராஜ், கோரிக்கைகளை விளக்கி பேசினார். 'நலிவடைந்த நிலையில் உள்ள திருமண அமைப்பாளர்களுக்கும் நலவாரியம் அமைக்க வேண்டும். பல்வேறுவகை திட்டங்கள் மூலம், நலவாரிய பயன்கள் அனைத்தும் திருமண அமைப்பாளர்களுக்கு கிடைக்கச் செய்யவேண்டும்,' என, கோஷங்கள் எழுப்பினர். அதன்பின், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி