வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்
காங்கயம்; வீட்டுமனைப்பட்டா கேட்டு, காங்கயம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கயம் தாலுகா, எல்லப்பாளையம் புதுார் ஊராட்சி, புள்ளக்காளிபாளையத்தைச் சேர்ந்த 20 குடும்பத்தினர், கடந்த ஏழாண்டுகளாக வீட்டுமனை பட்டா கோரி வருகின்றனர். அவர்களுக்கு இது வரை பட்டா வழங்கப்படவில்லை. இதையடுத்து பட்டா வழங்க கேட்டு, நேற்று காங்கயம் தாலுகா அலுவலகத்தில், ஆதி தமிழர் ஜனநாயக பேரவை தலைவர் பவுத்தன் தலைமையில், 20 குடும்பத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.