உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங்! பெற்றோர் வலியுறுத்தல்

மாணவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங்! பெற்றோர் வலியுறுத்தல்

உடுமலை;அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் மாதம் துவங்குகிறது. தேர்வுக்கான முதல் திருப்புதல் தேர்வு பள்ளிகளில் நடக்கிறது.மாணவர்கள் பள்ளி பாடங்களை படிப்பதில், 90 சதவீதம் தயாராகி விட்டனர். ஆனால் பொதுத்தேர்வு என்ற அச்சத்தால், படிப்பதையும் இறுதி நேரத்தில் மறந்து விடுகின்றனர்.இதனால் பல பள்ளிகளில், ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி முடித்த பின், அவர்களை மனதளவில் தேர்வுக்கு தயார் செய்வதற்கு ஊக்கமளிக்கின்றனர். இருப்பினும், அனைத்து மாணவர்களுக்கும் இது சாத்தியபடுவதில்லை.தேர்வு மதிப்பெண்களை மட்டுமே, வாழ்க்கையின் இலக்காகக்கொண்டு, அதில் குறைவாகவே அல்லது தேர்ச்சி அடையாமல் போகும் சமயங்களில், தவறான வழிகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.மாணவர்களின் இந்த மனநிலையை மாற்றுவதற்கு, நடமாடும் உளவியல் ஆலோசனை மைய திட்டத்தின் கீழ், கவுன்சிலிங் வழங்கப்பட்டது. தற்போது இத்திட்டம் நடைமுறையில் இல்லை.இப்போதும் மாணவர்களுக்கான, இலவச தொலைபேசி கவுன்சிலிங் வசதி உள்ளது. ஆனால் அவை குறிப்பிட்ட தொலைபேசி எண்களை அழைத்தால் மட்டுமே பெற முடியும்.மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள, உளவியல் ரீதியான ஆலோசனை தேவையாக உள்ளது.கல்வியாளர்கள் கூறியதாவது: மாணவர்களை நுாறு சதவீதம் தேர்வுக்கு தயார் செய்வதற்கு, அவர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பதும் அவசியம். அந்த வகையில் உளவியல் நிபுணர்கள் வாயிலாக, பள்ளிகளில் தேர்வுக்கு முன்பு கவுன்சிலிங் வழங்கலாம்.தேர்வின் முக்கியத்துவம், அச்சப்படாமல் எதிர்கொள்வது, நுாறு சதவீத பங்களிப்பை அளித்துவிட்டு, மதிப்பெண் குறித்து அச்சமில்லாமல் இருக்க தயார்படுத்தும் வகையில், அந்தந்த பகுதிகளில் உள்ள உளவியல் நிபுணர்கள் வாயிலாகவே, நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். கல்வித்துறையும் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ