உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துாய்மை காவலர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

துாய்மை காவலர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

உடுமலை; உடுமலை ஒன்றிய ஊராட்சிகளில், துாய்மைகாவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகளில், 42 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. கிராமங்களில் வீடுகளிலிருந்து கழிவுகளை சேகரிப்பதற்கு, ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் துாய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வீடுகள் தோறும் குப்பையை சேகரித்து, மக்கும், மக்காதவையாக தரம் பிரிக்கின்றனர். இப்பணிகள் பெரும்பான்மையான கிராமங்களில் முழுமையாக நடப்பதில்லை. துாய்மை காவலர்கள் பற்றாக்குறையாக இருப்பது முக்கிய காரணமாக உள்ளது. ஒன்றியம் முழுவதும், 255 துாய்மைக்காவலர்கள் மட்டுமே உள்ளனர்.மக்கள் தொகைக்கு ஏற்ப இவர்கள் எண்ணிக்கை இல்லாததால், பல பகுதிகளுக்கு நான்கு நாட்களுக்கு ஒருமுறை என்ற வீதம், கழிவுகளை சேகரிக்க செல்கின்றனர்.பணியாளர்கள் பற்றாக்குறையால், பொதுமக்களும் விழிப்புணர்வு இல்லாமல், கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதும், தீ வைத்து எரிப்பதும், நீர்நிலைகளில் வீசுவதும் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.இதனால், ஒவ்வொரு ஊராட்சியிலும், துாய்மை காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், ' ஊராட்சிகளில் இருக்கும் துாய்மை காவலர்கள் வாயிலாக, திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஊரக வளர்ச்சித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை