உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குளத்தின் இருபுறமும் பாதுகாப்பு வேலி; பொதுமக்கள் வலியுறுத்தல்

 குளத்தின் இருபுறமும் பாதுகாப்பு வேலி; பொதுமக்கள் வலியுறுத்தல்

அவிநாசி: சேவூரிலிருந்து குன்னத்துார் செல்லும் வழியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. 150 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்குளத்தில் பல மாதங்களாக தண்ணீர் தேங்கி நிரம்பியுள்ளது. அத்திக்கடவு - அவிநாசி திட்டம் வாயிலாக, தண்ணீர் நாள்தோறும் குளத்திற்கு வருகிறது. இக்குளத்தின் கரைப்பகுதியை ஒட்டியே குன்னத்துாருக்கு செல்லும் பிரதான சாலை சேவூர் கைகாட்டி ரவுண்டானாவிலிருந்து செல்கிறது. இதில் இரண்டு கி.மீ. வரை நீண்டுள்ள குளத்தின் கரைப்பகுதியில் மேல் தார் ரோடு அமைக்கப்பட்டு இருபுறமும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய நெடுஞ்சாலை துறை மூலம் இரும்பு தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. தார் ரோடு பல இடங்களில் மேடு பள்ளமாக வலுவிழந்து குழிகள் ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் தார் ரோட்டிற்கும் கீழ் உள்ள பகுதிக்கும் இடைவெளி தாழ்வாக உள்ளதால் இரவு நேரங்களில் டூவீலர்களில் வருபவர்கள் எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிபடுவதற்காக ஒதுங்கும்போது குளத்தில் தவறி விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பல இடங்களில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட இரும்பு தடுப்புகள் உடைந்து, பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் உள்ளனர். எனவே, உடனடியாக குளத்தின் மேல் பகுதியில் உள்ள தார் ரோட்டை தரமான தார் ரோடாக சீரமைத்து குளத்தின் இரு புறமும் உள்ள பாதுகாப்பு கம்பி வேலிகளை பலப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்