உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.8 லட்சத்தில் மழைநீர் வடிகால் ;போடிபட்டியில் பூமி பூஜை

ரூ.8 லட்சத்தில் மழைநீர் வடிகால் ;போடிபட்டியில் பூமி பூஜை

உடுமலை;போடிப்பட்டி ஊராட்சியில், 15வது நிதிக் குழு மானியம் வாயிலாக வளர்ச்சிப் பணிகளுக்கு, நிதி பெறப்பட்டுள்ளது. குறிப்பாக, ராஜ் நாயுடு வீதி மற்றும் குமரன் வீதியில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. இக்கட்டுமானத்திற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. ஊராட்சித் தலைவர் சவுந்தர்ராஜன், தலைமை, துணைத் தலைவர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார்.தொடர்ந்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவும் நடத்தப்பட்டது. ஊராட்சி கவுன்சிலர்கள் பாலசுப்ரமணி, லீலாவதி, அம்சவேணி, காளீஸ்வரி, அமிர்தம், சித்ரா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஊராட்சிச் செயலாளர் ராஜ்குமார், நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை