உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாராந்திர சிறப்பு பஸ் எண்ணிக்கை குறைப்பு?

வாராந்திர சிறப்பு பஸ் எண்ணிக்கை குறைப்பு?

திருப்பூர்;மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வு நடந்து வருவதால், வாராந்திர சிறப்பு பஸ் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக வெள்ளி, சனி இரவு, ஞாயிற்றுக்கிழமை பிற மாவட்டங்களை இணைக்கும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட், கோவில்வழி மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, வாரவிடுமுறைகளில், 40 முதல், 50 சிறப்பு பஸ் இயக்கப்பட்டு வந்தது. நடப்பு வாரம் பஸ்களின் எண்ணிக்கை, 35 ஆக குறைக்கப்பட்டுள்ளது.'கடந்த இரு வாரங்களாக மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வு நடந்து வருகிறது. வரும் வாரம், பத்தாம் வகுப்பு தேர்வு துவங்க உள்ளது.இது தேர்வுக்கான காலகட்டம் என்பதால், பெரும்பாலானோர் வார விடுமுறை நாட்களில் ஊருக்கு சென்று விட்டு, திங்கள் காலை திருப்பூர் திரும்புவதை தவிர்த்துள்ளனர். இதனால், பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டத்துக்கு ஏற்ப, பஸ்கள் டிப்போவில் இருந்து அனுப்பி வைக்கப்படும்,' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை