மேலும் செய்திகள்
ஒழுங்கு முறை கூடத்தில் தேங்காய், கொப்பரை ஏலம்
6 minutes ago
தென்னையில் ஊடுபயிராக பாக்கு: விவசாயிகள் ஆர்வம்
7 minutes ago
மக்காச்சோள பயிர் காப்பீடு: விவசாயிகளிடம் ஆர்வம்
8 minutes ago
இன்று இனிதாக
19 minutes ago
உடுமலை: மலைக்கிராமங்களுக்கு ரேஷன் பொருட்களை எளிதாக எடுத்துச்செல்லும் வகையில், வழித்தடத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகத்தில், குழிப்பட்டி, குருமலை, பூச்சிக்கொட்டம்பாறை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் முன்பு, சமவெளிக்கு வந்து ரேஷன் பொருட்களை வாங்கிச்செல்லும் நிலை இருந்தது. இதில், பல்வேறு இடர்பாடுகள் இருந்ததால், மலை கிராமத்திலேயே ரேஷன் பொருட்களை வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, குறிப்பிட்ட இடைவெளியில், சரக்கு வாகனங்கள் வாயிலாக ரேஷன் பொருட்களை எடுத்துச்சென்று வினியோகித்து வருகின்றனர். பூலாங்கிணறு உணவு பொருட்கள் சேமிப்பு கிடங்கில் இருந்து, காடம்பாறை, அப்பர் ஆழியாறு வழியாக நீண்ட துாரம் சுற்றி, இப்பொருட்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறது. மேம்படுத்தப்படாத வழித்தடத்தில், அடர்ந்த வனப்பகுதி வழியாக, ரேஷன் பொருட்களை கொண்டு செல்ல மிகுந்த சிரமப்படுகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில், அவ்வழித்தடத்தில், வாகனங்கள் செல்வதில் சிரமம் நீடிக்கிறது. எனவே மழைக்காலத்தில், ரேஷன் பொருட்கள் கிடைக்காமல், மலை கிராம மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அப்பகுதி மக்கள் கூறுகையில், 'அப்பர் ஆழியாறு வழியாக செல்லும் வழித்தடம் குண்டும், குழியுமாக மலைப்பாதையாக இருப்பதால், வாகனங்கள் வர முடிவதில்லை. சரக்கு வாகனம் வழித்தடத்தில் சிக்கிக்கொண்டால், நாங்களே நேரடியாகச்சென்று, பாதையை சீரமைக்க வேண்டியுள்ளது. கிராமங்களுக்கு தனியாக வழித்தடம் அமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. குழிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்குச்செல்லும் மலைப்பாதையை உடனடியாக பராமரிக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் செல்லும் வாகனங்கள் எளிதாக மலைக்கிராமங்களுக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
6 minutes ago
7 minutes ago
8 minutes ago
19 minutes ago