உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  டப்பா பஸ்களில் அச்சத்துடன் பயணம் மாற்றியமைக்க கோரிக்கை

 டப்பா பஸ்களில் அச்சத்துடன் பயணம் மாற்றியமைக்க கோரிக்கை

உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதி கிராம வழித்தடத்தில் இயக்கப்படும் டப்பா பஸ்களை மாற்றி, இரவு நேர போக்குவரத்து பாதிக்காமல் தவிர்க்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை அரசு போக்குவரத்து கிளைக்கழகத்தின் சார்பில், 104 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், கிராமங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாமல், ஆங்காங்கே நிற்பது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக பெண்களுக்காக இயக்கப்படும் 'பிங்க்' நிற பஸ்கள் பரிதாப நிலையில் உள்ளன. நேற்று முன்தினம் மாலை உடுமலையில் இருந்து அமராவதி வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ், தளி ரோடு மேம்பாலத்தில் செல்லும் போது திடீரென பழுதாகி நின்றது. பாலத்தின் மையப்பகுதியில் நின்ற பஸ்சால் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதித்தது. அப்பஸ்சில் சென்ற பெண்கள், மீண்டும் பாலத்தில் நடந்து வந்து வேறு பஸ் மாறிச்சென்றனர். பெண்கள் கூறியதாவது: பெருந்தொற்று காலத்துக்கு பிறகு, உடுமலையில் இருந்து கிராமங்களுக்கு சென்ற சில பஸ்கள் முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டு விட்டது. மேலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கிராமங்களுக்கு செல்லும் ஒரே பஸ்சும் நடுவழியில் நின்று விடுவதால், மிகுந்த சிரமப்படுகிறோம். கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ் பராமரிப்பு குறித்து, அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். பழுதடைந்த டப்பா பஸ்களை மாற்றி, இரவு நேரங்களில் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். திருமூர்த்திமலை உள்ளிட்ட அதிக பயணியர் செல்லும் வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க, ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை