மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா
20-Sep-2025
உடுமலை; உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உள்ள உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வழியாக, கோவை - மதுரை, திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, பயணியரின் பாதுகாப்பு கருதியும், சமூக விரோத செயல்களை தடுக்க வும், ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20-Sep-2025