உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓய்வு பெற்ற அரசு பஸ் ஊழியர் மொட்டை அடித்து போராட்டம் 

ஓய்வு பெற்ற அரசு பஸ் ஊழியர் மொட்டை அடித்து போராட்டம் 

திருப்பூர்; அரசு பஸ் ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தப்படி நிலுவை உள்ளிட்டவை வழங்க வலியுறுத்தி, ஓய்வு பெற்ற ஊழியர்கள் மொட்டையடித்து போராட்டம் நடத்தினர். அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 15வது ஊதிய ஒப்பந்தப்படியான சம்பள நிலுவை வழங்க வேண்டும்; 2003ம் ஆண்டுக்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பென்ஷன் வழங்க வேண்டும்; நிலுவையில் உள்ள ஓய்வுக்காலப் பணப் பயன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து, போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வகையில், திருப்பூர் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன், சி.ஐ.டி.யு., ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தினர்காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 40 நாளாக நடைபெற்றுவரும் காத்திருப்பு போராட்டத்தில், அரை நிர்வாணப் போராட்டம், பாடை கட்டிவைத்து போராட்டம் ஆகியனவும் நடைபெற்றது. 40வது நாளான நேற்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓய்வுபெற்ற ஊழியர்களில், 12 பேர் மொட்டை அடித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை