உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

பல்லடம்;கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை அலுவலர்கள், பல்லடம் தாலுகா அலுவலகத்தில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.வருவாய் துறை அலுவலர்களின் பணியிறக்கம், பெயர் மாற்றம், விதி திருத்தம், அலுவலக உதவியாளர் காலி பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வகையில், பல்லடம் தாலுகா அலுவலகத்தில், நேற்று, வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், மாவட்ட இணை செயலாளர் கவுரி தலைமை வகித்தார். வட்டக்கிளை தலைவர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் சிவகுமார் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மதியம் வரை காத்திருப்பு போராட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை