உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வழிப்பறி: வாலிபர் கைது

வழிப்பறி: வாலிபர் கைது

அவிநாசி: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், பட்டேல் வீதியைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர், கோவையில் இருந்து டூவீலரில் கோபி நோக்கி சென்றுள்ளார். தெக்கலுார் சர்வீஸ் ரோட்டில் டூவீலரை நிறுத்தி போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கரூர் மாவட்டம், வாங்கல்பாளையம் கருப்பண்ணன் நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் தினேஷ், 29, கார்த்திக் குமாரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் தர மறுக்கவே மொபைல் போனை பறிக்க முயன்றுள்ளார். உடனே கார்த்திக் குமார் சத்தமிடவே, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தினேஷை பிடித்து அவிநாசி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி