உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தெரு நாய்களை கட்டுப்படுத்த ரூ. 6 லட்சம் நிதி ஒதுக்கீடு

 தெரு நாய்களை கட்டுப்படுத்த ரூ. 6 லட்சம் நிதி ஒதுக்கீடு

உடுமலை: உடுமலை நகராட்சி பகுதியிலுள்ள தெரு நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை மேற்கொள்ள, ரூ. 6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உடுமலை நகராட்சியில் பிரதான ரோடுகள், அரசு அலுவலகங்கள் மற்றும் 33 வார்டுகளிலுள்ள குடியிருப்பு பகுதிகளிலும், நுாற்றுக்கணக்கான தெரு நாய்கள் சுற்றுகின்றன. இவை, பொதுமக்களை கடிப்பதோடு, வாகன விபத்துக்களுக்கும் காரணமாக உள்ளன. தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், நகராட்சி கூட்டத்தில், தெருநாய்களை கட்டுப்படுத்தும் வகையில், உரிய கால்நடை மருத்துவர்களை கொண்டு, கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்த, ரூ. 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி