உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாகனங்கள் விதிமீறல்: ரூ.6.58 லட்சம் அபராதம்

வாகனங்கள் விதிமீறல்: ரூ.6.58 லட்சம் அபராதம்

உடுமலை;உடுமலையில், கடந்த ஒரு மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய, 95 வாகனங்களுக்கு, 6.58 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டார பகுதிகளில், வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்லுதல், சரக்கு வாகனங்களில் மக்களை அழைத்துச் செல்லுதல், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட விதி மீறல் தொடர்கிறது. இந்த வாகனங்களால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது.இந்நிலையில், உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் அதிகாரிகள் குழுவினர், தொடர் வாகன ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஒரு மாதத்தில், தகுதி சான்று புதுப்பிக்காமலும், அனுமதிச்சீட்டு இல்லாமலும் இயக்கிய, 26 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கி, தற்காலிகமாக வாகனம் சிறை பிடிக்கப்பட்டது.வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கூறியதாவது:அதிக பாரம் ஏற்றி வருதல், தகுதி சான்று இல்லாமல் இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், அனுமதி சீட்டு தகுதிச் சான்று இல்லாமல் இயக்கியதாக, 95 வானங்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு, மொத்தம், 6 லட்சத்து, 58 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதில், 25 ஆயிரம் ரூபாய் சாலை வரியாக வசூலிக்கப்பட்டது. விதிமீறல்கள் தொடர்ந்து, கண்காணிக்கப்படுகிறது. போக்குவரத்து விதிகளை கடைபிடித்து விபத்துகளை தவிர்க்க, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !