உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊரக வளர்ச்சி துறை  அலுவலர் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி துறை  அலுவலர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்;தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சாந்தி தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார், கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன், அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட தலைவர் மணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.'அவுட்சோர்சிங் நியமன நடைமுறையை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ