உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நோயாளிகளுக்காக தனிக்குழு

நோயாளிகளுக்காக தனிக்குழு

திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 40 வயதை கடந்தவர்களுக்கு ரத்தஅழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்க வேண்டுமெனில், டாக்டரை சந்தித்த பின் மீண்டும் திருப்பி அனுப்ப வேண்டியுள்ளது.கால விரயத்தையும், சிரமங்களையும் தவிர்க்க, புறநோயாளிகளாக பதிவு சீட்டுப் பெறும், 40 வயதை கடந்தவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, எடை, உயரம் பரிசோதிக்க தனி மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவினர், செவிலியர்கள் சுழற்சி முறையில் காலை, 7:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை பணிபுரிவர். புறநோயாளி பதிவு சீட்டு பெற்ற, 40 வயதை கடந்தவருக்கு மேற்கண்ட பரிசோதனை செய்து, அதை குறிப்பிட்டு, டாக்டரிடம் அனுப்பி வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை