உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சென்சுரி பள்ளியில் வெள்ளி விழா நிறைவு

சென்சுரி பள்ளியில் வெள்ளி விழா நிறைவு

திருப்பூர்,:திருப்பூர், சென்சுரி பவுண்டேஷன் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி வெள்ளி விழா நிறைவு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.பள்ளி முதல்வர் வரவேற்றார். சிறப்பு விருந்தினரக, டீ பப்ளிக் பள்ளி இயக்குனர் டோரத்தி பங்கேற்று பேசுகையில், சென்சுரி குடும்பத்தில் ஒருவராக இருப்பதில் பெருமையடைவதாக தெரிவித்தார். பள்ளி தாளாளர் டாக்டர் சக்திதேவி, முன்னிலை வகித்தார்.பின், பள்ளியில் பல ஆண்டுகளாக பணியாற்றிய ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் மாணவர்கள், ஏற்கனவே பணிபுரிந்த ஆசிரியர்கள் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர்.மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி அரங்கேறியது. பள்ளியின், 25 ஆண்டு கால ஆவணப்படம், முன்னாள் மற்றும் இன்னாள் மாணவர்களை கவர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை