உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுதானிய உணவுத்திருவிழா: பள்ளி மாணவர்கள் அசத்தல்

சிறுதானிய உணவுத்திருவிழா: பள்ளி மாணவர்கள் அசத்தல்

உடுமலை;உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், சிறுதானிய உணவுத்திருவிழா நடந்தது.விழாவுக்கு பள்ளி முதல்வர் மாலா தலைமை வகித்தார். ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனச் செயலாளர் கார்த்திக்குமார் முன்னிலை வகித்தார்.விழாவையொட்டி, வரகு, சாமை, கம்பு, தினை, கேழ்வரகு, குதிரைவாலி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சோளம் உள்ளிட்ட சிறுதானியங்களில் இனிப்பு, கார வகைகள், புட்டு, களி, சுண்டல், இட்லி, தோசை, புலாவ், பிரியாணி, பொங்கல், கூழ் வகைகள் உட்பட பல்வேறு உணவுகள் தயாரித்து காட்சிப்படுத்தப்பட்டன.தவிர சிறுதானியங்கள் விற்பனை அரங்கங்களும் அமைக்கப்பட்டன. சிறப்பாக உணவு தயார் செய்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு, ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவன தலைவர் ராமசாமி மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை