மேலும் செய்திகள்
ரோட்டில் பள்ளம் தினமும் விபத்து
14-Apr-2025
திருப்பூர்: திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி வரும் நிலையில், இரவு நேரங்களில் சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைப்பது, சாலையோரங்களில் உள்ள கால்வாய், பாலத்திற்கு அடியில் குப்பைகளை கொட்டுவது போன்ற அத்துமீறல்களில் பலரும் ஈடுபடுகின்றனர்; இதனால், சுவாசக் கோளாறு ஏற்படுகிறது.தொழில் நகரான திருப்பூரில், சரியான கழிவுநீர் கால்வாய் கட்டுமானங்கள் இல்லாதது; கால்வாயில் வழிந்தோடும் கழிவுநீரை வெளியேற்ற போதிய கட்டமைப்பு இல்லாதது; வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்ட பல காரணங்களால் காற்றுமாசு என்பது அதிகம்.இது ஒருபுறமிருக்க, கிராம ஊராட்சிகள், நகர்ப்புறங்களை ஒட்டிய பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகத்தினர், தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடு, கடை மற்றும் நிறுவனங்களில் இருந்து சேகரிக்கும் குப்பைகளை கொட்டுவதற்கோ, அவற்றை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் வாயிலாக அகற்றுவதற்கோ எவ்வித கட்டமைப்பும் இல்லாத நிலையில், சாலையோரம் கொட்டி விடுகின்றனர்.குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் சாலையோரம் குப்பைகளை குவியலாக கொட்டி, எரியூட்டி விடுகின்றனர். இதனால், எழும் துர்நாற்றத்துடன் கூடிய புகையை சுவாசித்த படியே பயணிக்கும் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பாடும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, அவிநாசி - வஞ்சிபாளையம் ரோடு, கணியாம்பூண்டி ரோடு, பை-பாஸ் சர்வீஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில், குப்பை கொட்டி, எரியூட்டுகின்றனர்.எனவே, உள்ளாட்சி நிர்வாகத்தினர், இத்தகைய செயலில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு அபராதம் விதிக்க வேண்டும்.
14-Apr-2025