உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆன்மிக இசை கலை விழா

ஆன்மிக இசை கலை விழா

உடுமலை; உலக நல வேள்விக்குழு மற்றும் நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் முன்னேற்ற பேரவை சார்பில், ஆன்மிக இசை கலை விழா உடுமலையில் நாளை, (27ம் தேதி) காந்திநகர் வரசித்தி விநாயகர் கோவிலில், நடக்கிறது. பேரூர் ஆதினம் 24ம் பட்டம், சாந்தலிங்க ராமசாமி நுாற்றாண்டு விழாவையொட்டி, இந்த விழா உடுமலை காந்திநகர் வரசித்தி விநாயகர் கோவிலில், நாளை நடக்கிறது. காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, குருவந்தனம், சிவஞான தவவேள்வி, அகண்ட ராம நாம ஜெபம், விநாயகர் முதல் ஆஞ்சநேயர் வரை வரை வரிசைப்படுத்தி, இந்த ஆன்மிக இசை கலைவிழா நடைபெற உள்ளது. பரதநாட்டியம், கோலாட்டம், தேவராட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களும் நடைபெற உள்ளது. நகர்வல சங்கீர்த்தனமும் நடக்கிறது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 16 பஜனை, இசை மற்றும் பாரம்பரிய நடனக்குழுவினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை உலக நல வேள்விக்குழு மற்றும் நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் முன்னேற்ற பேரவையினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை