உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அவிநாசி;அவிநாசி, கங்கவர் வீதியிலுள்ள ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 19ம் தேதி 200 பெண்கள், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அதன்பின், ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.நேற்று காலை நான்காம் கால யாகசாலை வேள்வி பூஜைகள், யாத்ராதானம் ஆகியவற்றுடன் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, செல்லாண்டியம்மனுக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவைகள் நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு, கங்கவர் திருமண மண்டபத்தில் அன்ன தானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ