உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ மாகாளியம்மன் பொங்கல் விழா

ஸ்ரீ மாகாளியம்மன் பொங்கல் விழா

திருப்பூர்: அவிநாசிக் கவுண்டம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலமாக நடந்து வருகிறது.திருப்பூர், அங்கேரிபாளையம், அவிநாசிக் கவுண்டம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த, 20ம் தேதி துவங்கியது. பூச்சாட்டு விழாவுடன் ஆரம்பித்து, கருப்பராயன் பொட்டுசாமி பொங்கல் பூஜை, விநாயகர் பொங்கல் பூஜை, பட்டதரசி அம்மனுக்கு பொங்கல் பூஜை, அவிநாசி திருக்கோவிலிருந்து தீர்த்தம் கொண்டு வர செல்லுதல், கும்பம் எடுத்தல் உள்ளிட்டவை நடந்தது.நேற்று அதிகாலை மாவிளக்கு பூஜை, பொங்கல் விழா, உச்சிகால பூஜை மற்றும் இரவு அம்மன் அழைத்து கங்கையில் விடுதல் நடந்தது. இன்று மதியம் மஞ்சள் நீராாட்டு விழா நடக்கிறது. நாளை அபிஷேக அலங்கார பூஜை நடக்கிறது. விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்று வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !