உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிேஷகம்; பொதுமக்களுக்கு அழைப்பிதழ்

ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிேஷகம்; பொதுமக்களுக்கு அழைப்பிதழ்

அனுப்பர்பாளையம்: அயோத்தியில் ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்திற்கு வருகை தருமாறு பா.ஜ.,வினர் பொது மக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர்.இதையொட்டி திருப்பூர் அங்கேரிபாளையம் மண்டல பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் நேற்று மாநகராட்சி 23 வது வார்டு மாகாளியம்மன் கோவில் வீதியில் உள்ள வீடுகளுக்கு சென்று வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, அகல் விளக்கு, பூ ஆகியவற்றுடன் அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றனர்.முன்னதாக அனைத்து பொருட்களையும் மாகாளியம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். நிகழ்ச்சியில், மண்டல தலைவர் ராம் குமார், மாநில நிர்வாகிகள் கோவிந்தசாமி, சுதா மணி, மாவட்ட நிர்வாகிகள் தங்க வேல், ஹிந்து முன்னணி நகர் துணை தலைவர் ராஜசேகர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்