உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ சாரதாதேவி ஜெயந்தி விழா

ஸ்ரீ சாரதாதேவி ஜெயந்தி விழா

அனுப்பர்பாளையம்,:திருமுருகன்பூண்டியில் உள்ள, ஸ்ரீ விவேகானந்த சேவாலயத்தில் அன்னை ஸ்ரீ சாரதா தேவியரின் ஜெயந்தி விழா நடைபெற்றது.விழா, அதிகாலை 5:00 மணிக்கு சுப்ரபாரதத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, திருப்பாவை, திருவெம்பாவை, பாராயணம், லலிதா சஹஸ்ர நாமம், பாராயணம் மற்றும் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, அன்னையின் மகிமை குறித்து, சேவாலய நிறுவனர் செந்தில்நாதனின், சொற்பொழிவு நிகழ்த்தினார். நிகழ்ச்சியில், பங்கேற்றவர்களுக்கு ஆன்மிக புத்தகம், பூஜை பொருட்கள் மற்றும் காலண்டர் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி