/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் உண்டியல்; பக்தர்கள் ரூ.7.16 லட்சம் காணிக்கை
ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் உண்டியல்; பக்தர்கள் ரூ.7.16 லட்சம் காணிக்கை
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.கோவில் செயல் அலுவலர் வனராஜா, அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. பக்தர்கள் வரிசையில் அமர்ந்து, காணிக்கை பணத்தை எண்ணினர். உண்டியலில் மொத்தம், 7 லட்சத்து 16 ஆயிரத்து 466 ரூபாய் மற்றும் 13 கிராம் தங்கம், 60 கிராம் வெள்ளி பொருட்கள், சிறிய நடராஜர் சிலை ஆகியன காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. உண்டியல் பணம், கோவில் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. அடுத்த சில நாட்களில் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட உள்ளதாக அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.