உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில கராத்தே போட்டி; மாணவருக்கு பாராட்டு

மாநில கராத்தே போட்டி; மாணவருக்கு பாராட்டு

திருப்பூர்;மாநில கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மங்கலம் கதிரவன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.'கீ டோக் ெஹ கராத்தே டூ இந்தியா குழுமம்' ஈரோட்டில் நடத்திய சவுத் இந்திய லெவல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், மங்கலம், கதிரவன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில், பிளஸ் 1 மாணவர் அஜய்குமார் முதலிடம், ஏழாம் வகுப்பு மாணவி யஹ்யா, மூன்றாமிடம் பெற்றனர்.இதுதவிர, ஜோதி கலைத்தமிழ் சிலம்பாலயம் அறக்கட்டளை நடத்திய மாவட்ட சிலம்பம் போட்டியில் கருண்சர்மா, முனீஸ்வரன் பங்கேற்று, முதலிடம் பெற்றனர். கவின்யா ஸ்ரீ, 2 வது இடம். வெற்றி பெற்ற கோப்பை, சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை