உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கேலோ இந்தியா விளையாட்டு விழிப்புணர்வு மாரத்தானில் மாணவர் ஆர்வம்

கேலோ இந்தியா விளையாட்டு விழிப்புணர்வு மாரத்தானில் மாணவர் ஆர்வம்

திருப்பூர்:'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டியில், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி, இந்தாண்டு தமிழகத்தில் நடக்கிறது. சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவையில் நடக்கவுள்ள இப்போட்டிகள், வரும், 19ல் துவங்குகிறது. இதுதொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, நேற்று திருப்பூரில் நடந்தது.திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் துவங்கிய போட்டி, 5 கி.மீ., துாரமுள்ள அணைப்புதுாரில் நிறைவு பெற்றது. சப்- கலெக்டர் சவுமியா ஆனந்த் துவக்கி வைத்தார். நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர்.மாணவர் பிரிவில், செல்வகுமார் (நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி), விஷால் (சின்னசாமி அம்மாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி), கோகுல் (எஸ்.கே.எல்., பப்ளிக் பள்ளி) ஆகியோர் முதல் மூன்றிடம் பிடித்தனர்.மாணவியர் பிரிவில், ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வர்ஷிகா, வர்ஷிதா ஆகியோர் முதல் இரு இடங்களையும், புனித ஜோசப் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி சாருநிதா மூன்றாமிடம் பெற்றார்.வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரகுகுமார் பாராட்டு தெரிவித்ததுடன், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை