உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கார் கவிழ்ந்து மாணவர் பலி; உடன் சென்ற நண்பர்கள் காயம்

 கார் கவிழ்ந்து மாணவர் பலி; உடன் சென்ற நண்பர்கள் காயம்

காங்கயம்: ஊதியூர் அருகே கார் கவிழ்ந்து ஏற்பட்டவிபத்தில் கல்லுாரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். பல்லடம், மாணிக்காபுரத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் 20, பெருந்தொழுவைச் சேர்ந்த ஹரீஷ், 20, செவந்தாம்பாளையம் தீபக், 20, அறிவொளி நகர் கார்த்திகேயன், 20 மற்றும் இடுவாய் பாரதிபுரம் கோகுலகிருஷ்ணன், 20. இவர்கள் ஐந்து பேரும் சூலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்து வருகின்றனர். ஐந்து பேரும் நேற்று முன்தினம் இரவு கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு ஒரு காரில் புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், திருப்பூர் - தாராபுரம் ரோடு, என்.காஞ்சி புரம் செங்காட்டு தோட்டம் அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறி, ரோட்டோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த நண்பர்கள் ஐந்து பேரும் காயமடைந்தனர். அவ்வழியாக வந்தவர்கள், அவர்களை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில், கதிர்வேல் உயிரிழந்தார். மற்ற நான்கு பேரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை