உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மூலவர் மீது படர்ந்த சூரிய ஒளி; கருவலுார் பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த பக்தர்கள் பரவசம்

மூலவர் மீது படர்ந்த சூரிய ஒளி; கருவலுார் பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த பக்தர்கள் பரவசம்

அவிநாசி; அவிநாசி அருகேயுள்ள கருவலுாரிலுள்ள கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், மூலவர் மீது சூரிய ஒளி விழுந்ததால், பக்தர்கள் பரவசம் அடைந்து பெருமாளை தரிசித்தனர். கருவலுாரில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில் உள்ளது. நின்ற கோலத்தில், பெருமாள் அருள்பாலிப்பது கோவிலின் தனிச்சிறப்பு. நவபாஷானத்தால் உருவான பெருமாளும், தேவியரும் காட்சியளிக்கும் தலமாக உள்ளது. இத்தலத்தின் மகிமை உணர்ந்த வீர ராஜேந்திர சோழன் கி.பி. 1226ம் ஆண்டில் சோழர் மற்றும் விஜயநகர நாயக்கர் கால கட்டடக்கலையுடன் இணைந்து பெருமாளுக்கு கோவில் எழுப்பினார். கோவிலிலுள்ள கல்வெட்டுகளில் வீர ராஜேந்திர விண்ணகரம் என ஊரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை, காலை 6.30 மணியிலிருந்து 6.55 மணிக்குள் கருவறையில் சூரிய ஒளி விழுகிறது. அப்போது, நவபாஷானங்களால் உருவாக்கப்பட்ட பெருமாள் மற்றும் தேவியர் மீது அபிஷேகத்தின் போது ஊற்றப்படும் வெள்ளை நிறப் பால் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. பெருமாள் மீது சூரிய ஒளி விழுந்த அதிசயத்தை கண்ட பக்தர்கள், 'கோவிந்தா... கோபாலா... வேங்கடேசா' என கோஷமிட்டு வணங்கி பரவசம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை