மேலும் செய்திகள்
அளவீடு செய்த கோவில் நிலங்களில் எல்லைக்கல்
30-Aug-2024
உடுமலை: உடுமலை அருகே, கோவில் நிலம் அளவீடு செய்து, சர்வே கற்கள் நடப்பட்டன.அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில் நிலங்களை, ஆவணங்கள் அடிப்படையில் அளவீடு செய்து, கோவிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகை மற்றும் எல்லைக்கற்கள் நடவு செய்ய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.அதன் அடிப்படையில், உடுமலை அருகேயுள்ள பெரியபட்டி ஜலப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 53.85 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து, சர்வே கல் நடும் பணி நடந்தது. திருப்பூர் தனி தாசில்தார் (ஆலய நிலங்கள்) ரவீந்திரன், மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் தீபா மற்றும் கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.
30-Aug-2024