மலேசியா விவேக பசுமை நடுவம் அமைப்பின் இயக்குனர் கண்ணன், சமீபத்தில் திருப்பூர் வந்திருந்தார். வெளிநாடுகளில் நடந்த தமிழ்மொழி சார்ந்த கருத்தரங்குகள், இலக்கிய சந்திப்புகள் போன்றவற்றில் இவரது பங்களிப்பு முக்கியமானது. சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் நடந்த உலகத் தாய்மொழி நாள் விழாவில் 'வேர்கொண்டு விண்ணெழுதல்' என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய உரை:தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் தாய்மொழி பற்றி முழுமையாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். 'மொழிகளில் சிறந்த சொல், தமிழ்ச்சொல். அதைத் தொழுது கற்றுக்கொள்ள வேண்டும்,' என்கிறான் மகாகவி பாரதி. ஒரு மொழியை கற்றுக்கொள்ள ஏன், தொழ வேண்டும்? தமிழ் மொழியை முழுமையாக கற்கும் போது, அமரத்துவம் அடைய முடியும், ஆகையால் தான் அப்படி கூறியிருக்கிறார், பாரதி.தமிழ்த்தாத்தா உ.வே.சா., 'இருந்தமிழே (இருக்கின்ற தமிழே), இன்னும் நல்ல நுால்களே எனக்கு தா' என தமிழைத் தெய்வமாக வணங்கிக் கேட்கிறார். ஒரு மொழியைத் தெய்வமாக பார்த்தது, என்றால், அது தமிழை தான்; தமிழ், அறிவுமொழி.தமிழை உணர்ந்து படிக்க வேண்டும். தாய்மொழியில் பேசினால், மதிப்பு என்பதை வெளிநாடுகளுக்கு சென்றாலும் நாம் உணர்வோடு இருக்க வேண்டும். விழிப்புணர்வோடு தக்க வைக்க வேண்டிய மொழி, தமிழ்மொழி. ஐரோப்பா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் மூன்றாம், நான்காம் தலைமுறையினர் வந்த போது, நம் தமிழை அங்கு எடுத்துச் செல்லவில்லை. அடையாளத்தில் மட்டுமே தமிழன் வெளிநாடுகளில் தெரிகிறான். அவர்கள் அங்கு நம் தமிழ் மொழியை பேசுவதில்லை.உலகம் முழுதும், 160 நாடுகளில் நம் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால், தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.----கண்ணன்
பேரக்குழந்தையுடன் பேச தேவைப்பட்ட 3 மொழிகள்
இலங்கையை சேர்ந்தவர் ஒரு மூதாட்டி; டென்மார்க்கில் உள்ள மகனுடன் டேனிஷ் மொழியிலும், பிரான்ஸில் உள்ள மற்றொரு மகனிடம் பிரெஞ்சிலும், ஜெர்மனியில் உள்ள மகளிடம் ஜெர்மனிலும் பேச வேண்டியிருக்கிறது. தமிழ் தெரிந்த பெண், மகன், மகள், பேரக்குழந்தைகளுடன் பேச மூன்று மொழி கற்க வேண்டியிருக்கிறது.இதுவே, பெற்றோர், தாய்மொழியில் குறைந்தபட்சமாவது பேசப் பழக்கியிருந்தால், மூதாட்டி மகிழ்ந்திருப்பார்.