உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 5 ஆயிரம் பனை விதை நட இலக்கு

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 5 ஆயிரம் பனை விதை நட இலக்கு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும், 5,000 பனை விதைகள் நடவு செய்ய, ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். தமிழகத்தில், பசுமை பரப்பை அதிகரிக்கவும், பனை விதை உள்ளிட்ட மரக்கன்று வளர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது. குறிப்பாக குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்த, கிராமப்புறங்களில் பசுமை போர்வையை அதிகரிக்க செய்யும் முயற்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும், தலா, 5,000 பனை விதை வீதம் நடவு செய்ய, ஊரக வளர்ச்சி முகமை திட்டமிட்டு, இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்குரிய அறிவிப்பு, ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகத்தினரும், மரக்கன்று நடும் இடத்தை தேர்வு செய்து வைக்குமாறும், கலெக்டர் அறிவிக்கும் நாளில், மரக்கன்று நடும் பணியை துவக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்தந்த கிராமங்களில் உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலை கரையோரம், விவசாய நிலங்களின் எல்லை, பொது இடங்கள் உள்ளிட்ட இடம் தேர்வில், கிராம ஊராட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஒரு லட்சம் பனை விதை கடந்த, எட்டு ஆண்டுகளாக பனை விதை சேகரித்து, விதைத்து வருகிறோம். இதுவரை, ஒரு லட்சம் பனை விதைகளை பலருக்கும் வழங்கி உள்ளோம். தற்போது, தமிழக அரசின் சார்பில், ஒவ்வொரு ஊராட்சிக்கும், 5 ஆயிரம் பனை விதை நடவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால், பல்வேறு இடங்களில் உள்ள ஊராட்சிகளில் இருந்தும், ஊராட்சி நிர்வாகத்தினர் எங்களிடம் வந்து, பனைவிதைகளை வாங்கிச் செல்கின்றனர். பல ஊராட்சிகள், பனை விதை சேகரிக்க திணறுவதாக தெரிகிறது. அவரவர் பகுதிகளில் உள் ள பனை மரங்களில் அடியில் பனை விதைகள் விழுந்திருக்கும்; அவற்றை சேகரித்து நடவு செய்தாலே போதும். - சம்பத்குமார் ஒருங்கிணைப்பாளர்கிராமிய மக்கள் இயக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை