உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் 

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் 

திருப்பூர்;பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், குமரன் ரோட்டில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.திருப்பூர் வடக்கு கிளை தலைவர் நவ்ஷாத் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் நாகராஜ் கணேஷ்குமார், திருப்பூர் கிழக்கு வட்டார செயலாளர் குழந்தை அற்புதராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கயத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர் அருள்மொழி தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை