உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தைப்பூச தேரோட்ட விழா 1,200 பேருக்கு தியான பயிற்சி

தைப்பூச தேரோட்ட விழா 1,200 பேருக்கு தியான பயிற்சி

திருப்பூர்;காங்கயத்தில் உள்ள ஹார்ட்புல்னெஸ் அமைப்பின் சார்பில், சிவன்மலை அடிவாரத்தில் உள்ள சர்வோதய சங்க வளாகத்தில் தேர்த்திருவிழா நடந்த, மூன்று நாளில், பக்தர்களுக்கு 20 நிமிட இதய நிறைவு தியான பயிற்சி யோக இலவசமாக அளிக்கப்பட்டது.இதற்காக, 20 தியான பயிற்சியாளர்களும், 100 தன்னார்வ தொண்டர்களும் பணியாற்றினர். இதில், மனம் ஒழுங்கு படுத்துதல், மனதில் தெளிவு, சாந்தம் மற்றும் ஆழ்ந்த அமைதி, அலைபாயும் மனது அமைதி அடைவதால் ஞாபகசக்தி மனம் குவித்தல் போன்றவை மேம்படுவது தொடர்பான பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு, தியான பயிற்சி கற்றுத்தரப்பட்டது. இலவசமாக நடந்த இப்பயிற்சியில், 1,200 பேர் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை காங்கயம் கிளை ஹார்ட்புல்னெஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உட்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை