உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பறவைக்கு வேண்டும் பலமான பாதுகாப்பு

பறவைக்கு வேண்டும் பலமான பாதுகாப்பு

நஞ்சராயன் குளத்துக்குவரும் பறவைகள் பலவும் வெளி மாநில, வெளி நாட்டுப் பறவைகள்தான்; அவை அயலானாக இருந்தாலும், நம்ம ஊர் சுற்றுச்சூழல் சிறந்திருப்பதை எடுத்துக் காட்டுபவையாக விளங்குகின்றன.திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளம், தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை வசம் இருந்த குளம், வனத்துறை வசம் மாற்றப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, குளத்தின் மொத்த பரப்பு, 390 ஏக்கரை கண்டறிந்து, வேலி அமைக்கும் பணி துவங்கியுள்ளது.முன்னதாக, குளத்திற்கு முழுமையாக வேலி அமைக்க, கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. பொதுமக்களில், அப்பகுதிகளை வழித்தடமாக பயன்படுத்தும் சிலர், ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். கூலிபாளையம் ரோட்டில் இருந்து மேற்கே செல்லும் மண் வழித்தடத்தை, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது. அறிவிப்பாணை வெளியாகி, மக்களின் கருத்துகள் பெறப்பட்ட நிலையில், விரைவில் சமரச தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வனத்துறை அலுவலர்கள் கூறுகையில், 'பொதுமக்கள் கருத்து கேட்பு மீதான தீர்வு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக, தனி அலுவலர் நியமித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எல்லைகள் உறுதியான பிறகு, பாதுகாப்பு வேலி அமைக்கப்படும்.வனத்துறை அதிகாரிகள், பயிற்சி முடித்து திரும்பியதும், மீண்டும் பறவைகள் சரணாலய பணி வேகமெடுக்கும். குளம் பாதுகாப்புக்காக, ஆறு இளைஞர்கள் 'வாட்சர்'களாக நியமிக்கப்பட்டுள்ளனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ