| ADDED : ஜன 05, 2024 01:23 AM
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சியில் மூங்கில் பூங்கா மற்றும் 37 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வளாகங்கள் இன்று திறப்பு விழா செய்யப்படுகிறது. திருப்பூர் மாநக ராட்சிக்கு உட்பட்ட சின்னக்காளிபாளையத்தில் மூங்கில்பூங்கா மற்றும் அறிவியல் பூங்கா 12 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. வெற்றி அமைப்பு சார்பில் இது அமைக்கப்பட்டுள்ளது. அதே போல், மாநகராட்சி 4வது மண்டல அலுவலகம் 2.5 கோடி ரூபாய் செலவில், முருகம்பாளைத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், நஞ்சப்பா பள்ளி வளாகத்தில், நுாலகம் மற்றும் அறிவுசார் மையம், 2.61 கோடி; பி.என்., ரோடு புது பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பு மற்றும் வணிக வளாகம் 30.60 கோடி ரூபாய்; ஒரு கோடி ரூபாய் செலவில், நான்கு இடங்களில் நல வாழ்வு மையம் ஆகியன கட்டி முடிக்கப்பட்டுள்ளன.இந்த வளாகங்களை, சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், இதற்கான நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், கலெக்டர், கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.