உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை மறுநாள் நம்ம திருப்பூர் மராத்தான்

நாளை மறுநாள் நம்ம திருப்பூர் மராத்தான்

திருப்பூர்;'நம்ம திருப்பூர் மராத்தான்' நிகழ்ச்சி, நாளை மறுநாள் (18ம் தேதி) நடைபெற உள்ளது. யங் இந்தியன்ஸ், சி.ஐ.ஐ., மற்றும் மாநகராட்சி நிர்வாகம், போலீஸ் இணைந்து நடத்தப்படுகிறது.திருப்பூர் - காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் அருகே உள்ள ஐ-வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப்பில், காலை, 6:00 மணிக்கு, ஏரோபிக்ஸ், ஜூம்பா நடனம் உள்பட கலை நிகழ்ச்சிகளுடன், மராத்தான் துவங்குகிறது.'ஓடு… உனக்காக ஓடு; உடல் நலத்துக்காக ஓடு' என்கிற தலைப்பில், 10 கி.மீ., - 5 கி.மீ., - 3 கி.மீ., என மூன்று பிரிவுகளில் மராத்தான் நடத்தப்படுகிறது. மராத்தானில் பங்கேற்று ஓடுவதற்காக, ஆண்கள், பெண்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் பதிவு செய்துள்ளனர். நேற்றுடன் முன்பதிவு முடிவடைந்துள்ளது; மொத்தம், 3,500 பேர் பதிவு செய்துள்ளனர்.யங் இந்தியன்ஸ் திருப்பூர் பிரிவு தலைவர் நிரஞ்சன் கூறியதாவது:திருப்பூரில், யங் இந்தியன்ஸ், சி.ஐ.ஐ., சார்பில் மூன்றாவது ஆண்டாக, வரும், 18ம் தேதி மராத்தான் நடத்தப்படுகிறது. கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி மேயர், மாநகராட்சி கமிஷனர், எஸ்.பி., ஆகியோருடன், மராத்தானில் தொடர்ந்து பங்கேற்று வரும் நந்தகுமார், அருண், சந்தோஷ்குமார், ரித்விக் பல்பீர், இரேந்தர் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.மாற்றுத்திறனாளிகள் 20 பேர், வீல் சேரில், மராத்தானில் பங்கேற்கின்றனர். இதில், பங்கேற்க பதிவு செய்துள்ள, 3,500 பேருக்கும், டி-சர்ட், காலை உணவு, துணிப்பை மற்றும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும். 5 கி.மீ., - 10 கி.மீ., ஆண், பெண் பிரிவு மற்றும் பள்ளி மாணவர்களுக்கான 5 கி.மீ., பிரிவில், முதல் பத்து இடம் பிடிப்போருக்கு ரொகப்பரிசு வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !