உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை கருணாம்பிகை அம்மன் தேரோட்டம் நடக்கிறது!

நாளை கருணாம்பிகை அம்மன் தேரோட்டம் நடக்கிறது!

அவிநாசி: அவிநாசியில் நடந்து வரும் சித்திரை தேர்த்திருவிழாவில், நாளை அம்மன் தேரோட்டம் நடைபெறுகிறது.அவிநாசியிலுள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், நடந்து வரும் சித்திரை தேர்த்திருவிழாவில் நேற்று பெரிய தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து, மேற்கு மற்றும் வடக்கு ரத வீதி சந்திப்பில், தேரை நிறுத்தினர். இன்று காலை, 10:00 மணிக்கு மீண்டும் தேரோட்டம் துவங்கி, மதியத்திற்குள் நிலைநிறுத்தம் செய்யப்படும்.நாளை காலை, 10:00 மணிக்கு கருணாம்பிகை அம்மன் (சிறிய தேர்), சண்டிகேஸ்வரர், சுப்பிரமணியர் மற்றும் கரி வரதராஜ பெருமாள் ஆகிய மூர்த்திகளின் தேரோட்டம் நடக்கிறது.இன்றும், நாளையும் நடக்கவுள்ள தேரோட்டத்தின் போது அவிநாசியிலுள்ள நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தேரோட்ட ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர்கள் செய்துள்ளனர். நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !