உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மர த்துப்போன மனிதம்!

மர த்துப்போன மனிதம்!

பல்லடம்:புவி வெப்பமயமாவதை தடுக்கவும், காற்று மாசடையாமல் இருப்பதையும் மரங்களே உறுதி செய்கின்றன. ஆனால், 'மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்' என்ற வாசகம் வெறும் பேச்சளவுக்கு மட்டுமே உள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரப்பின்படி, ரோடு விரிவாக்கத்துக்காக ஒரு மரம் வெட்டினால், அதற்கு இணையாக, 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.ஆனால், பின்பற்றுவதில்லை. பட்டா நிலங்களில் மரங்கள் வெட்டுவதற்கு கூட கட்டுப்பாடு உள்ளது. வெட்டப்பட்ட மரங்களை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லும் போது, கிராம நிர்வாக அலுவலரிடம், எத்தனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்ற சான்று பெற வேண்டும்.தேக்கு, சந்தனம், கருங்காலி உள்ளிட்ட விலை உயர்ந்த மர வகைகளை வெட்டுவதனால், அவை, தனிநபர்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்தாலும், வனத்துறையின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும்.ஆனால், விதிமுறைகளை, அதிகாரிகள் பெயரளவுக்கு மட்டுமே பின்பற்றி வருகின்றனர். விதிமுறை மீறி மரங்கள் வெட்டப்படுவது குறித்து யாரேனும் புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, நெடுஞ்சாலை, உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் போலீசார் என, யாரும் பெரிய அளவு நடவடிக்கை எடுப்பதில்லை.தன்னார்வலர்கள், பொதுமக்கள் அழுத்தம் கொடுத்தால் மட்டும், பெயரளவுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடுகின்றனர். மரங்களை வெட்டுபவர்களுக்கு இது சாதகமாக அமைகின்றது. ஆண்டுதோறும், புதிதாக வளர்க்கப்படும் மரங்களைக் காட்டிலும், வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.பல்லடத்தில், மரங்கள் வெட்டப்படுவது அதிகரித்துள்ளன. கடந்த ஐந்து மாதங்களில், தேசிய நெடுஞ்சாலை, சித்தம்பலம், சுல்தான்பேட்டை, தெற்குபாளையம் குட்டை என, பல்வேறு இடங்களில் மரங்கள் வெட்டி கடத்திய சம்பவம் குறித்து தொடர்ச்சியாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மரக்கடத்தல் கும்பலுக்கு இது சாதகமாகவே அமையும்.நகரப் பகுதிகள் விரிவடைந்து வருவதால், ஏற்கனவே உள்ள பழமையான பல மரங்கள் மறைந்து விட்டன, ரோடு விரிவாக்க பணிகள், குழாய் மற்றும் கேபிள் பதிப்பு, மின் வினியோக பணிகள் உள்ளிட்டவற்றின் போது, சர்வ சாதாரணமாக மரங்கள் வெட்டப்படுகின்றன. இது ஒருபுறம் இருக்க அனுமதியின்றி மரங்களை வெட்டிக் கடத்துவதற்கென்றே படுபாதக கும்பல் பயமின்றி செயல்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததே இதற்குக் காரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை