| ADDED : நவ 21, 2025 06:35 AM
அனுப்பர்பாளையம்: நல்லாறு பாதுகாப்பு இயக்கத்தினர் கூறியதாவது: திருமுருகன்பூண்டி பாலத்தில் இருந்து நல்லாற்றின் ஓரமாக நெசவாளர் காலனிக்கு செல்லலாம். பாதை வசதி உள்ளது. அந்த பாதையை காண்பித்துதான் நெசவாளர் காலனி இடம் விற்பனை செய்யப்பட்டது. மண் ரோடு என்பதால், சீரமைப்பு இல்லாமல் பாதையில் முட்புதர்கள் மண்டி தற்போது பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது நெசவாளர் காலனிக்கு செல்ல வேண்டும் என்றால் திருமுருகன்பூண்டி ரிங் ரோடு வழியாக, 3 கி.மீ. துாரம் சுற்றி செல்ல வேண்டும். பாதையை சீரமைக்க வலியுறுத்தி நெசவாளர் காலனி பகுதி மக்களுடன் நாங்களும் பூண்டி நகராட்சி நிர்வாகத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம். நகராட்சி தலைவர் பாதையை பார்த்து சென்றுள்ளார்; எந்த நடவடிக்கையும் இல்லை. பாதையை சீரமைத்து மின் விளக்கு அமைத்தால், நெசவாளர் காலனி மக்கள் பயன்படுவதோடு, போக்குவரத்து நெருக்கடியும் குறையும். அதோடு ஆற்றோர ஆக்கிரமிப்பும் தடுக்கப்படும். ரோட்டை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.