உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  காவல்துறைக்கு கனக்கிறது பணி

 காவல்துறைக்கு கனக்கிறது பணி

திருப்பூரில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். வடமாநிலத்தினர் போர்வையில், வங்கதேசத்தினர் ஊடுருவலும் உள்ளது. மிகுந்த கண்காணிப்பில் உள்ள நகரமாக திருப்பூர் இருந்து வருகிறது. மாநகர போலீஸ் கமிஷனரகம் உதயமாகி, பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும், போலீஸ் பற்றாக்குறை, குற்றப்பிரிவுக்கு என பிரத்யேக இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியிடங்களாக தொடரும் நிலை உள்ளது. முக்கிய அரசியல் நிகழ்வு, பண்டிகை காலத்தின் போது, உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வெளியே செல்லும் போது, போலீசார் மற்ற பணிகளில் ஈடுபடுவது சிரமமான சூழல் ஏற்படுகிறது. மாநகரம் மட்டுமின்றி, புறநகரில் இதுபோன்ற போலீஸ் பற்றாக்குறை நிலை தொடருகிறது. போலீசார் பற்றாக்குறை 50 சதவீதம் வரை உள்ளது. இதனால் போலீசாருக்கு பணிச்சுமை கூடியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை