உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நல்லாறு நல்ல ஆறாக முழுமையாக துார்வார வேண்டும்

நல்லாறு நல்ல ஆறாக முழுமையாக துார்வார வேண்டும்

திருப்பூர்: அவிநாசியில் துவங்கி, திருமுருகன்பூண்டியைக் கடக்கும் நல்லாறு, திருப்பூரின் வடக்கு பகுதி வழியாக நஞ்சராயன் குளம் சென்று சேர்கிறது.திருமுருகன்பூண்டியை கடந்து, பின், பிச்சம்பாளையம் வழியாகப் பயணிக்கிறது. பல்வேறு பகுதிகளில் ஆற்றங்கரையையொட்டி குடியிருப்புகள் உள்ளன. மாநகராட்சி எல்லைக்குள் அறிவொளி நகர், ஜி.எம்., நகர் ஆகியன 6வது வார்டு பகுதியில் உள்ளது. மாநகராட்சியின் 9 மற்றும் 10 ஆகிய வார்டுகளிலும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.கடந்த மாதம் பெய்த மழையின் போது, நல்லாற்றில் பெருக்கெடுத்த மழை நீர் முறையாக செல்ல வழியின்றி, அறிவொளி நகர், ஜி.எம்., நகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. அங்கு வசிப்போர் பெரும் அவதிக்குள்ளாகினர்.மழை நீர் புகுந்த போது அங்கு எம்.பி., சுப்பராயன், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் சென்று பார்வையிட்டனர். துார்வாராததால், குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்தது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதியில் ஆறு துார் வாரும் பணி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ள இடத்தில் மேற்கு பகுதியில் கடந்த நான்கு நாட்களாக நல்லாறு துார் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது கிழக்கு பகுதியில் துார் வாரும் பணி நடக்கிறது. மாநகராட்சி சார்பில் இப்பணி நடந்து வருகிறது.அப்பகுதியினர் கூறியதாவது:ஆறு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக துார் வாரப்படாமல் புதர் வளர்ந்து மண்டிக்கிடக்கிறது. தற்போது மாநகராட்சி சார்பில் ஒரு கி.மீ., தொலைவுக்கு துார் வாரும் பணி நடக்கிறது.இதன் மூலம் முழுமையாக இதன் நோக்கம் நிறைவேறாது. பொதுப்பணித்துறை சார்பில் ஆறு பகுதி முழுவதும் நஞ்சராயன் குளம் வரை துார் வாரப்பட வேண்டும். அப்போது தான் பணி முழுமை பெறும். ஆற்றில் நீர் முறையாக கடந்து செல்லும். வீடுகளுக்குள் நீர் புகுவது தடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை