உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆர்ப்பரிக்கும் துாவானம் அருவி; 25 நாட்களாக உபரி நீர் வெளியேற்றம்

ஆர்ப்பரிக்கும் துாவானம் அருவி; 25 நாட்களாக உபரி நீர் வெளியேற்றம்

உடுமலை; உடுமலை அமராவதி அணையிலிருந்து, கடந்த 25 நாட்களாக, ஆறு மற்றும் பிரதான கால்வாயில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், கடந்த, ஜூன், 16ல் அணை நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டது.தொடர்ந்து, அணைக்கு நீர் வரத்து காணப்படுவதால், அணையிலிருந்து, கடந்த, 25 நாட்களாக ஆற்று மதகு மற்றும் பிரதான கால்வாயில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.அமராவதி அணையில் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ள கேரளா மாநிலம், மூணாறு, தலையாறு, மறையூர் பகுதிகளில் பெய்து வரும் மழையால், அணைக்கு நீர்வரத்து முக்கிய ஆறாக உள்ள பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மறையூர் அருகே அமைந்துள்ள துாவானம் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.இதனால், இந்த ரோட்டில் செல்லும் சுற்றுலா பயணியர் உற்சாகமாக அருவியை ரசித்து செல்கின்றனர்.

அணை நீர் மட்டம்

அமராவதி அணையில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 88.65 அடி நீர்மட்டம் உள்ளது. அணை மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,924.73 மில்லியன் கனஅடி நீர் இருப்பு காணப்பட்டது.அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு, 488 கனஅடியாகவும், அணையிலிருந்து ஆற்றில், 300 கனஅடி நீரும், பிரதான கால்வாயில், 304 கனஅடி நீர், இழப்பு, 20 என, 604 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது. நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழையால், கடந்த ஒரு மாதமாக அணை நீர் மட்டம் ததும்பிய நிலையில் காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை