உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆறு மொபைல் போன் திருடிய கில்லாடி கைது

ஆறு மொபைல் போன் திருடிய கில்லாடி கைது

அவிநாசி; அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இன்ஸ்பெக்டர் முத்துமாரியம்மாள் உள்ளிட்ட அவிநாசி போலீசார் வாகன சோதனை செய்தனர்.அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அதில் இளைஞரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பையில் ஆறு மொபைல் போன்கள் இருந்தன. முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து வந்த இளைஞர் திடீரென போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்றார்.உடனே சுதாரித்த போலீசார் இளைஞரை துரத்தி பிடித்தனர். அவர் ஆந்திர மாநிலம், குந்தக்கல்லு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகன் பத்ரி என்கிற மகாதேவ் ராவ், 22, என்பதும், அனைத்து மொபைல்போன்களும் திருடப்பட்டது என்பதும் தெரிந்தது. அவிநாசி போலீசார் பத்ரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை