உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் திருக்குறள் நன்னெறி வகுப்புகள்

நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் திருக்குறள் நன்னெறி வகுப்புகள்

திருப்பூர்: அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டு வரை; ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு, திருக்குறள் நன்னெறி வகுப்பு நடத்த வேண்டும்; இப்பணிகளை மாவட்ட கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.மாணவர் ஒவ்வொருவரும் திருக்குறளை வாழ்வியல் நெறியாக பின்பற்ற வேண்டும். திருக்குறளில் இருக்கும் அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள, 105 அதிகாரங்களை உள்ளடக்கிய குறள்களை, ஆறு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு நன்னெறி கல்வியாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும். தினமும் காலை இறைவணக்க கூட்டத்தில், திருக்குறளை, அதன் பொருளுடன் கட்டாயம் மாணவர் கூற வேண்டும். தமிழ் இலக்கிய மன்றம் மூலம் திருக்குறள் சார்ந்த கதை, கவிதை, நாடகம், வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்த வேண்டும். பள்ளி அளவிலான போட்டியில், 100 குறள்களை ஒப்புவிக்கும் மாணவ, மாணவியரை பெற்றோர் ஆசிரியர் கழம் மூலம் பாராட்டி, நிதி வழங்க வேண்டும். பள்ளிகளில் நடக்கும் ஆய்வுக்கூட்டங்களில் நன்னெறி கல்வியின் நீடித்த பயன் தரும் விளைவை விளக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !